Categories
மாநில செய்திகள்

நாளை பேங்குக்கு லீவு… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

நிவர் புயல் காரணமாக நாளை ஒருநாள் வங்கிகள் இயங்காது என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

நிவர் புயல் சென்னைக்கு கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகின்றது. இந்த புயல் இன்று மாலை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் நாளை காரைக்கால் மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

நேற்று 25 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிவர் புயல் பின்னர் 15 கிலோ மீட்டராக குறைந்து இன்று காலை நான்கு கிலோமீட்டர் வந்திருந்தது. தமிழகத்தில் நாளை பொது விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது நிவர் புயல் காரணமாக நாளை ஒருநாள் அரசு பொது விடுமுறை விடப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்

Categories

Tech |