Categories
மாநில செய்திகள்

நாளை மக்கள் இதை செய்தால் நடவடிக்கை….. காவல்துறை கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வரும் திங்கள்கிழமை(24 ஆம் தேதி) முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனவே மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்வதற்காக  இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று இரவு 9 மணி வரையிலும், நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அனைத்து கடைகளும் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் நாளை முழுவதும் கடைகள் திறந்திருக்கும் நிலையில் மக்கள் அச்சத்தில் பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டாம் என்றும், அதிக விலைக்கு பொருட்கள் விற்றாலும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது. தளர்வுகளை பயன்படுத்தி பொருட்கள் வாங்குகிறோம் என்ற பெயரில் நகர் முழுவதும் தேவையின்றி சுற்றக்கூடாது. அந்தந்த பகுதிகளிலேயே அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ளவும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |