நாளை மதுக்கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வாணிப கழக மதுபான கடைகள் மூடப்படும். இதனையடுத்து எப்.எல்-1, எப்.எல்-2, எப்.எல்-3, எப்.எல்-3ஏ, எப்.எல்-3ஏஏ உரிமம் பெற்ற மதுபான கடைகள் மூடப்படும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.