தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்கு மத்தியில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்தவகையில் இன்று சென்னை, கோயம்பேடு, கோடம்பாக்கம், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் எழும்பூர், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, மந்தவெளி உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது.
இந்நிலையில் வங்கக்கடலில் நாளை மறுநாள் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்திய-மேற்கு, வட மேற்கு மற்றும் வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மிக கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.