Categories
மாநில செய்திகள்

நாளை மறுநாள் பள்ளிக்கல்லூரிகள் திறப்பு… அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை…!!!

நாளை மறுநாள் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் அனைத்து மாவட்ட ஆட்சியர் உங்களிடம் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை செய்ய உள்ளார்.கடந்த ஆண்டு முதல் பரவி வந்த கொரோனா தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே பகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. நடப்பு ஆண்டிற்கான பள்ளிகள் செப்டம்பர் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதனால் பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், அந்த மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட ஆட்சியரிடம் தலைமைச் செயலாளர் இறையன்பு முக்கிய ஆலோசனை செய்து வருகிறார். மேலும் பள்ளிகளில் மாணவர்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கவேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |