Categories
தேசிய செய்திகள்

நாளை மறுநாள் பேச்சுவார்த்தைக்கு வாங்க… மத்திய அரசு அழைப்பு…!!!

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை டிசம்பர் 30-ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 40 அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 33வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 6வது கட்ட பேச்சுவார்த்தையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொட்டும் பனியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியுள்ளது. இந்நிலையில் போராடும் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் இலவசமாக வழங்க சிக்கி அமைப்பான கால்சா கிசான் மால் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

திகிரி எல்லைப்பகுதியில் உள்ள இதற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. விவசாயிகளுக்கு தேவையான ரொட்டி, கம்பளி, சானட்டரி பேட், பால் உள்ளிட்டவற்றுடன் கால் மசாஜ் செண்டரையும் அமைத்துள்ளது. இதனையடுத்து நாளை மத்திய அரசுடன் விவசாயிகளின் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த இருந்த நிலையில், டிசம்பர் 30-ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

Categories

Tech |