சென்னையில் நாளை மறுவாக்குப் பதிவு நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மாநிலம் முழுவதும் மொத்தம் 60 % வாக்குகள் பதிவானது. நேற்று மாலை வாக்குப்பதிவு முடிந்தவுடன் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தையும் பெட்டியில் வைத்து மூடி சீல் வைத்தனர்.
இதன்பின் வாக்கு எண்ணும் இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. மேலும் மாநிலம் முழுவதும் மின்னணு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை மறு வாக்குப்பதிவு சென்னையில் இரண்டு வார்டுகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இரண்டு வார்டுகளில் மறுவாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடைசி ஒரு மணி நேரம் 5 மணி முதல் 6 மணி நேரம் வரை கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்குள்ளானவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.