பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை 2024 -ஆம் வருடம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நாளை மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்நிலையில் தி.நகரில் உள்ள பாரதிய ஜனதா மாநில தலைமையகமான கமலாலயத்தில் நாளை காலை 10 மணி முதல் மாலை வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு ஆலோசனை நடத்துகிறார். மேலும் இதில் கலந்துகொள்வதற்காக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர் போன்றவர்கள் வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வந்துள்ளனர்.
Categories