சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க அனைவருக்கும் அனுமதி வழங்கப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முழு ஊரடங்கு காரணமாக பயணிகள் ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இருந்தது. அதன்பிறகு பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று சிறப்பு ரயில்கள், அத்தியாவசிய அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்காக மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், நேர்முகத்தேர்வுக்கு செல்பவர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. மேலும் பயணம் செய்பவர்கள் உரிய சான்றிதழ்களுடன் வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி நாளை முதல் பெண்கள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.