Categories
மாநில செய்திகள்

நாளை முதல் அரசு அலுவலகங்களில்…. இ-சேவை மையம் திறக்க…. தமிழக அரசு அனுமதி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கானது நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் அரசு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள் திறக்க அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |