தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளை முதல் ஜனவரி 2ஆம் தேதி இரண்டாம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மோசமான நிலையிலுள்ள கட்டடங்கள் கண்டறியப்பட்டு இடிக்கப்படும்.அந்த பள்ளி மாணவர்கள் அருகில் இருக்கும் பள்ளிகளுடன் இணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பள்ளிகளுக்கு நாளை முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் நடைபெறாமல் இருப்பதற்கு 13 ஆயிரம் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது காரணம் என்று கூறியுள்ளார்.