தமிழகத்தில் நாளை முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்கள் அனைவருக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து டிசம்பர் 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் திறக்கப்படுகின்றன.
அதனால் நாளை முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் மட்டும் கல்லூரிக்கு வரலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஆகியோருக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “வாரத்திற்கு ஆறு நாட்கள் மட்டுமே கல்லூரிகள் செயல்பட வேண்டும். தொற்று அறிகுறிகள் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதி உண்டு. கல்லூரியில் மாணவர் விடுதிகளில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க அனுமதி. ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆரோக்கிய சேது செயலியை டவுன்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். அனைவரும் முக கவசம் அணிந்து இருப்பது கட்டாயம்” என்று குறிப்பிட்டுள்ளது.