Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் இந்த வங்கி ATM-ல் பணம் எடுக்க முடியாது… அதிரடி அறிவிப்பு…!!!

பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கும் விதிமுறையை மாற்றி அமைத்துள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். தங்களின் வரவு செலவுகளை மிகப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு வங்கிக் கணக்கு பயன்படுகிறது. தங்களின் தேவைக்கு ஏற்றவாறு வங்கிக்கணக்கில் பணம் செலுத்தவும், எடுப்பதற்கும் மக்கள் அதனை பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு வங்கி கணக்கு வைத்துள்ள பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏடிஎம் வைத்திருக்கின்றனர். தங்களின் தேவைக்கு பணம் தேவைப்படும்போது வங்கிக்கு செல்லாமல் ஏடிஎம் மையத்திற்கு சென்று பணம் எடுத்துக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம் எந்திரங்களில் பணம் எடுக்கும் விதிமுறைகளை மாற்றி அமைத்துள்ளது. அதன்படி பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் EMV அல்லாத ஏடிஎம் எந்திரங்களில் இருந்து இனி பணம் எடுக்க முடியாது. இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. மேலும் இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க வாடிக்கையாளர்கள் PNB One என்ற டிஜிட்டல் முறையை பயன்படுத்த கேட்டுக்கொண்டுள்ளது.

Categories

Tech |