Categories
மாநில செய்திகள்

நாளை முதல் இரவு 11 மணி வரை…. மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு…!!!

சென்னையில் மெட்ரோ ரயில் நாளை காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ரயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும், பயணிகளின் வசதிக்காகவும் நாளை முதல் வார நாட்களில் மெட்ரோ ரயில் சேவைகள் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை நீட்டித்து இயக்கப்பட இருக்கிறது.

நெரிசல் மிகுந்த நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் ஐந்து நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பத்து நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்றும் மேலும் பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |