தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இந்த ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.
பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பால், பத்திரிகை, மருந்துப்பொருட்கள் கடைகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்க ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை முதல் தொழிற்சாலை வாகனங்கள் மற்றும் தொழிற்சாலை பணியாளர்களின் வாகனங்களுக்கு இ-பதிவு கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நாளை முதல் தொழிற்சாலைகளின் வாகனங்கள் இ-பதிவு செய்துகொள்ள வேண்டும். பணியாளர்கள் இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதியில்லை.