Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் கட்டாயம் – மத்திய அதிரடி உத்தரவு …!!

கொரோனா வைரஸ் கடந்த 5 மாதங்களாக இந்தியாவை சூறையாடி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு பணிகளை, மாநில அரசுடன் ஒருங்கிணைத்து முன்னெடுத்து வருகின்றன. இதனிடையே நாடு முழுவதும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சில தளர்வுகள் விதித்து மத்திய அரசு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதே நேரத்தில் தளர்வுகளை அமல்படுத்துவது தொடர்பாக மாநில அரசுகள் முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்ற வழிமுறைகளையும் வழங்கி இருந்தது.

இந்நிலையில் நாடு முழுவதும் நாளை முதல் யோகா மையங்கள், உடல் பயிற்சி கூடங்கள் திறக்கப்பட உள்ளன. அதற்கான கட்டாய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஜிம் மற்றும் யோகா மையங்களில் சானிடைசர், தெர்மல் பரிசோதனை கட்டாயம் இருக்க வேண்டும். முக கவசம் அணிந்து தான் வரவேண்டும். 95 சதவீதம் குறைவான ஆக்ஸிஜன் செறிவு  உள்ளவர்களுக்கு அனுமதி கிடையாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |