தமிழக சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. சார்பில் ஏராளமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தற்போது தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பட்ஜெட் மீதான முழு விவாதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. மானிய கோரிக்கை விவாதம் துவங்கப் போகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தபடி, சட்டமன்ற நேரலை ஒளிபரப்பு நாளை முதலாவது தொடங்க தமிழக முதல்வர் ஆவன செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
Categories