Categories
மாநில செய்திகள்

நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி…. மகிழ்ச்சி செய்தி…!!!-

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு உள்ளிட்ட  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்ததன்  காரணமாக சுற்றுலா பகுதிகளுக்கு பயணிகள் அனுமதிக்கப்படாமல் இருந்தது. அந்த வகையில் கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் பாதிப்பு குறைந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது.

இதற்கிடையில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் கோவை குற்றாலம் சுற்றுலா தலம் அக்டோபர் 10ஆம் தேதி மூடப்பட்டது. இந்த நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி (நாளை) முதல் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைக்குட்பட்டு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. சுற்றுலா பயணிகள் www.coimbatorewilderness.com என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்யலாம்.

Categories

Tech |