தமிழகத்தில் சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருவது அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பரவி வரும் கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு விதமான முன்னெடுப்புகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மாவட்டம் தோறும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமித்து கொரோனா தடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. அந்தந்த மாவட்டங்களில் அதிக பாதிப்பு உள்ள இடங்களில் முழு முடக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது.
இந்த வரிசையில் தற்போது கோவையும் இணைந்துள்ளது. கடந்த சில நாட்களாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், நாளை மாலை 5 மணி முதல் 27-ஆம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ராஜாமணி உத்தரவிட்டுள்ளார். கொரோனாவை தடுக்க முழு ஊரடங்கு அமல் படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.