கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உதகை மற்றும் மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குறைந்த அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உதகை மற்றும் மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி ஏப்ரல் 3 முதல் ஜூலை 7ஆம் தேதி வரை வார இறுதி நாட்களில் ரயில்கள் இயக்கப்படும். சனிக்கிழமை காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்தும், ஞாயிற்றுக்கிழமை காலை 11.25 மணிக்கு உதகையில் இருந்தும் ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.