Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் தங்க பத்திரம் விற்பனை தொடக்கம்…. எவ்வளவு விலை, எப்படி வாங்குவது?…. இதோ முழு விவரம்….!!!!

நாட்டில் அடுத்த கட்ட தங்க பத்திர விற்பனைக்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு நிதியாண்டிற்கான 3ம் தொகுப்பு தங்க பத்திர விற்பனை நாளை முதல் தொடங்குகிறது. 2022-23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் மூன்றாவது கட்ட தங்க பத்திர விற்பனை நாளை தொடங்கிய டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தங்க பத்திரங்கள் விலை கிராமுக்கு ரூ.5,409 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் வாங்குவோருக்கு 50 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் பங்குச் சந்தைகள் மூலம் இதனை வாங்கிக் கொள்ளலாம். ஒரு நபர் குறைந்தபட்சம் ஒரு கிராம்,அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கத்தில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் அதற்கு தங்க பத்திரம் தான் சிறந்த முதலீடு. எல்லா நெருக்கடியிலும் தங்கத்தின் மதிப்பு எப்போதும் உயரக்கூடும்.தங்கத்தின் மதிப்பு உயர உயர தங்க பத்திரத்தின் மதிப்பும் உயரும்.  இதற்கு ஜிஎஸ்டி கிடையாது . அது மட்டும் அல்லாமல் வருடத்திற்கு இரண்டு புள்ளி ஐந்து சதவீதம் வட்டி வருமானமும் உங்களுக்கு கிடைக்கிறது. செய்கூலி மற்றும் சேதாரம் போன்ற கூடுதல் செலவுகள் எதுவும் கிடையாது. தங்கத்தை பாதுகாக்க வேண்டிய அவசியமும் தங்க பத்திரத்தில் கிடையாது. வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் பங்குச்சந்தை மூலமாக தங்க பத்திரத்தை வாங்கிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |