தமிழகத்தில் தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்துவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. மேலும் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றது. இதனிடையே மதுரை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை எடுக்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் பள்ளிகளில் மாணவர்களை சமூக இடைவெளியுடன் அமர வைக்க வேண்டும் எனவும் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அதற்கான சூழ்நிலைக்கேற்ப மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தொற்று பரவலுக்கு ஏற்ப மற்ற மாவட்டங்களிலும் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.