Categories
மாநில செய்திகள்

நாளை முதல் பள்ளிகள் திறப்பு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது வரை பள்ளிகள் திறக்கப்பட வில்லை. பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும், கொரோனா மாணவர்களிடம் பரவத் தொடங்கியதால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் புதுச்சேரியில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் திறக்கப்படும் என அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். அனைத்து வகுப்புகளும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்படும். அரை நாள் மட்டும் செயல்படும் பள்ளிகளுக்கு விருப்பப்படும் மாணவர்கள் வரலாம். மேலும் ஜனவரி 18 முதல் முழுமையாக பள்ளிகளில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பள்ளி வரும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தனிமனித இடைவேளை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |