Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு…. உத்திரபிரதேச அரசு திடீர் முடிவு…!!!!

கொரோனா தொற்று குறைய தொடங்கி உள்ளதால் நாளை முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க உத்திரபிரதேச மாநில அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் பள்ளி ,கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டது. இதனை அடுத்து தொற்று குறைந்த நிலையில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டதால் அதி வேகமாக பரவியது.

குறிப்பாக கொரோனா 2-வது அலை  வடமாநிலங்களில் கோரத்தாண்டவம் ஆட்டிப்படைத்தது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன .இதனைத் தொடர்ந்து மீண்டும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டதும் தென்னாப்பிரிக்காவில் கண்டறிந்த ஓமைக்ரான் என்ற புதிய வகை தொற்றினால் இந்தியாவிலும் பரவத் தொடங்கி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.

இதனால் மத்திய அரசு இரவு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்த மாநில அரசுக்கு பரிந்துரைத்தது. அந்த வகையில் பிப்ரவரி 7ஆம் தேதி நாளை முதல் பள்ளி ,கல்லூரிகளைத் திறக்க உத்தரபிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக  கூறப்படுகிறது.

 

Categories

Tech |