இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் அதிகமாக பாதிக்கப்பட்டது மும்பை நகரம் தான். அங்கு நோய் தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டு உயிர்ரிழந்தனர். இதனால் அங்கு தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில் தற்போது மும்பையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நாளை முதல் புறநகர் ரயில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரயிலில் பயணிக்க பயணச்சீட்டு வாங்குவதற்கு இரண்டு தவணை தடுப்பூசி அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.