Categories
மாநில செய்திகள்

நாளை முதல் பேருந்துகள், ஆட்டோ ஓடாது…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் 2 நாட்களுக்கு ஆட்டோக்கள், பேருந்துகள், கால் டாக்சிகள் ஓடாது என்று சி.ஐ.டி.யூ சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதலை எதிர்த்தும் மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் வருகிற 29 மற்றும் 30 தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் கால் டாக்சிகள் ஓடாது என்று சி.ஐ.டி.யு பொதுச்செயலாளர் ஆறுமுக நாயினார் அறிவித்துள்ளார்.

இந்தப் போராட்டத்தில் பாரதிய மஸ்தூர் சங்கத்தை தவிர மற்ற தொழிற்சங்கங்கள் ஈடுபட உள்ளனர். மேலும் 99 தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. இதன் காரணமாக 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Categories

Tech |