நாளை முதல் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டிய கட்டாயமில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது . இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டது.
மேலும் மே 6-ஆம் தேதியிலிருந்து புதிய கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக பல முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் நிலையில் நாளை முதல் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதற்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.