நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் ஒரு சில மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர், ஜெய்ப்பூர், ஜோத்புர், சாக்வாரா, கோட்டா, குஷால்கார், நகரங்களில் நாளை முதல் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநகராட்சிகளிலும் இரவு 10 மணி வரை மட்டுமே சந்தைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.