தமிழகத்தில் ஊரடங்கானது வரும் ஜூலை-31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் எத்தனை நாட்கள் நீட்டிப்பது என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதையடுத்து தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒரு வாரகாலத்திற்கு(ஆகஸ்ட்-9 வரை) ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு மத்தியில் ஒருசில இடங்களில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
எனவே சென்னை உள்ளிட்ட சில இடங்களில் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேட்டூர் அணை பூங்காவில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.