Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் மே 31 வரை…. 7 சிறப்பு ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம்.

அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக பயணிகளிடம் இருந்து போதிய வரவேற்பு இல்லாததால் 7 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் – மன்னார்குடி, கண்ணூர் – கோவை, கோவை – கண்ணூர், ஆலப்புழா -கண்ணூர், கண்ணூர் – ஆலப்புழா, எழும்பூர் – திருச்சி, திருச்சி – எழும்பூர் சிறப்பு ரயில்கள் நாளை முதல் மே 31 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |