Categories
தேசிய செய்திகள்

நாளை முதல்…. ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. செம சூப்பர் அறிவிப்பு…!!!!

முன்பதிவு இல்லாத பெட்டிகள் மீண்டும் 12 ரயில்களில் இணைப்பதற்கு தெற்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா காரணமாக ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டது. இதனையடுத்து கொரோனா சற்று குறைந்து வரும் நிலையில் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்து பயணம் செய்யவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முன்பதிவில்லாத பெட்டிகள் மீண்டும் 12 ரயில்கள் இணைப்பதற்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

முதல் கட்டமாக அனுமதிக்கப்பட்டுள்ள ரயில்கள் வரும் 3ஆம் தேதி முதல் முன்பதிவில்லாத பயணிகள் ரயிலில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளது. அதன்படி, சென்ட்ரல் – பெங்களூரு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் , பெங்களூரு பிருந்தாவன் – சென்ட்ரல், சென்ட்ரல் – கோவை எக்ஸ்பிரஸ், கோவை – சென்ட்ரல் இண்டர்சிட்டி, விழுப்புரம் – திருப்பதி எக்ஸ்பிரஸ், திருப்பதி – விழுப்புரம், சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ், திருப்பதி – சென்ட்ரல், சென்ட்ரல் – திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ், திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் – சென்ட்ரல், மங்களூரு சென்ட்ரல் – மட்கான் பாசஞ்சர், மட்கான்- மங்களூரு சென்ட்ரல் பாசஞ்சர். இந்த 12 ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டு இரண்டாம் வகுப்பு உட்கார்ந்து செல்லும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |