வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி தேவைகளை உடனே முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முடிவதற்கு இன்னும் ஏழு நாட்கள் மட்டுமே உள்ளன. அதனால் வங்கி தொடர்பான எந்த வேலையையும் நீங்கள் செய்ய திட்டமிட்டிருந்தால், அதை முன்கூட்டியே முடிப்பது மிகவும் நல்லது. ஏனென்றால் நாளை முதல் 3 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை, 26 ஆம் தேதி 4வது சனிக்கிழமை விடுமுறை, 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என மூன்று நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதனால் அப்போது வங்கிகள் அனைத்தும் செயல்படாது. அதனால் முடிந்த அளவுக்கு இன்றே உங்கள் வங்கி தேவைகளை முடித்துக் கொள்ளுங்கள். மூன்று நாட்கள் வங்கிகள் விடுமுறை என்பதால் ஏடிஎம்களில் பணம் எடுப்பது மிகக் கடினமாகும். அதனால் இன்று இரவுக்குள் பணம் தேவைப்பட்டால் எடுத்துக்கொள்ளுங்கள். மேலும் டிசம்பர் 30-ஆம் தேதி சில மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது. டிசம்பர் 31-ஆம் தேதி புத்தாண்டுக்கு நாளிலும் விடுமுறை இருக்கும் என்பதால் மறக்காமல் உங்கள் வங்கி வேலைகளை உடனே செய்து முடியுங்கள்.