இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் பரவலை தடுப்பதற்காக பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகின்றன. அந்தவகையில் கோவாவில் நாளை முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை கோவா அரசு பிறப்பித்துள்ளது. மேலும் மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்வதை கட்டுப்படுத்துவதற்காக இந்த ஊரடங்கு பிறப்பித்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் கோவா வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.