Categories
மாநில செய்திகள்

நாளை முதல் 3 நாட்களுக்கு…. நாடு தழுவிய போராட்டம்…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்த நிலையில் ஒருசில மாநிலங்களில் சதம் அடித்துள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து நாளை முதல் (வரும் 28, 29, 30 ஆம் தேதி) ஆகிய 3 நாட்களில் போராட்டம் நடைபெறும் என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். தொண்டர்கள் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |