மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அது மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் தரிசிக்க வருகின்றனர். அமாவாசை, பவுர்ணமி பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டுமே இந்த கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு நாளை முதல் 4 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. நாளை 13-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.