கொரோனாவின் மையமாக விளங்கிய தலைநகர் சென்னை தற்போது அதன் பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது. தமிழக அரசின் உறுதியான நடவடிக்கையை இதற்கு காரணம் என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்தன. குறிப்பாக சென்னையில் முழுவதுமாக முழு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக சென்னையை தவிர பிற மாவட்டங்களில் நோய்தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சென்னையைப் போல பல அம்சங்களில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஜூலை 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை நான்கு நாட்கள் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனாவை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் முடிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.