தமிழகத்தில் கொரோனா-3 வது அலையை தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலய திருவிழாவையொட்டி நாளை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாங்கண்ணி திருவிழாவுக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம்.
உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா (ஆகஸ்ட்-29) நாளை தொடங்குகிறது. இதனால் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.