Categories
மாநில செய்திகள்

நாளை வரை விடுமுறை நீட்டிப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை வரை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான நிவர் புயல் தீவிரமடைந்து நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடந்த போதிலும் பெய்த கனமழையால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும் தொடர் மழை, வெள்ளநீர், மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை நீட்டித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |