இஸ்லாமிய அமைப்புகள் ஹிஜாப் விவகாரம் தொடர்பான ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து நாளை போராட்டம் நடத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் நடந்த ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக இறுதி விசாரணை அனைத்தும் நிறைவடைந்து 20 நாட்களுக்குப் பிறகு, இந்த ஹிஜாப் வழக்கில் நேற்று (மார்ச் 15) தீர்ப்பு வழங்கப்படும் என்று ஐகோர்ட்டு அறிவித்த நிலையில், இந்த தீர்ப்புக்காக கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதன்படி “கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை செல்லும்” என்று கர்நாடகா ஐகோர்ட் நேற்று அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.
உடனடியாக மாணவி நிபா நாஸ் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். மேலும் இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞரான சஞ்சய் ஹெக்டே இன்று சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளார். ஆனால் அதற்கு சுப்ரீம் கோர்ட்டானது, ஹோலி பண்டிகைக்கு பின் இந்த மனு விசாரணை பற்றி பட்டியலிடுவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து நாளை இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஹைகோர்ட் தீர்ப்பில் கூறியுள்ளதாவது, இஸ்லாமிய மதத்தில் ஹிஜாப் அணிவது அத்தியாவசியமாக பின்பற்றப்படும் ஒரு நிகழ்வு அல்ல என்றும் ஹிஜாப் அணிவது குறித்து குரானில் கட்டாயப்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார். இதை அடுத்து சீருடை குறித்து உத்தரவிடும் அதிகாரமானது அரசுக்கு உள்ளதாகவும், இதை கருத்தில் கொண்டு கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி இந்த உத்தரவை மாநில அரசு பிறப்பித்துள்ளது.
எனவே அந்த உத்தரவை செல்லாது என கூறி யாரும் எதிர்க்க முடியாது. அதனால் அரசின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வருகின்ற இந்த ரிட் மனுக்கள் அனைத்தையுமே தள்ளுபடி செய்யப்படுவதாக கூறியுள்ளார். மேலும் கல்லூரிக்கு வெளியே மாணவிகளை வெளியே நிறுத்திய கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் படியும் உத்தரவிட முடியாது என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.