உதயநிதி ஸ்டாலினின் ட்விட்டர் பதிவால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உதயநிதி ஸ்டாலின் வலம் வருகிறார். இதைத்தொடர்ந்து தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் திகழ்கிறார். இவர் குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக உதயநிதி ஸ்டாலின் அறிமுகமானார். இவருடைய முதல் படம் அமோக வெற்றி பெற்றது. இவர் நடித்த மனிதன் படம் இவரை தமிழ் சினிமாவில் சிறந்த ஹீரோவாக தடம் பதித்தது. இதைத்தொடர்ந்து சைக்கோ, கண்ணே கலைமானே, நிமிர் போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தார்.
இதுமட்டுமில்லாமல் தற்போது வெளியாகி வரும் பல படங்களின் திரையரங்கு உரிமையையும் வாங்கி வருகிறார். நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் திரையரங்கு உரிமையை வாங்கியுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் ஒரு அறிவிப்பை நாளை வெளியிடப் போவதாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் படத்தின் தொலைக்காட்சி உரிமையை உதயநிதி ஸ்டாலின் வாங்கியிருப்பார் என்று தெரிவித்து வருகின்றனர். மேலும் இது பீஸ்ட் படத்தின் அறிவிப்பா இல்லையெனில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாக இருக்கும் படங்களின் அறிவிப்பா என்று ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள்.