Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நாளை 138 மையங்களில் தடுப்பூசி முகாம்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை வேக வேகமாக பரவி வந்த நிலையில் தொடர்ச்சியாகமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக நோயின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இருப்பினும் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் மக்களுக்கு விரைந்து தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி போடுவதற்கு மக்களிடையே ஆர்வம் இருந்தும் பற்றாக்குறையின் காரணமாக என்ன செய்வதென்று அறியாது மாநில அரசு தவித்து வருகிறது. எனவே தமிழகத்திற்கு கூடுதல் அளவில் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதையடுத்து தற்போது தமிழகத்திற்கு மத்திய தொகுப்பிலிருந்து 4 லட்சம் தடுப்பூசிகள் வந்து சேர்ந்துள்ளன. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் நாளை 138 மையங்களில் பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு கார்மேகம் தெரிவித்துள்ளார். மொத்தம் 17 ஆயிரத்து 500 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |