Categories
மாநில செய்திகள் வானிலை

நாளை 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அதன்படி தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மலைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது .

Categories

Tech |