Categories
Uncategorized மாநில செய்திகள்

நாளை 3ஆவது மெகா தடுப்பூசி முகாம்… பயன்படுத்தி கொள்ளுங்கள்… அமைச்சர் மா. சுப்பிரமணியன்!!

நாளை நடக்கும் 3ஆவது சிறப்பு முகாமில் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட மாபெரும் தடுப்பூசி முகாமில் 20 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கூடுதலாகவே 28,91,21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.. இரண்டாவதாக செப்டம்பர் 19ஆம் தேதி நடத்தப்பட்ட முகாமில் 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.. ஆனால் இலக்கை விடவும் கூடுதலாக 16,43,879 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதேபோல நாளை ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த மெகா முகாமில் 15 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது, நாளை நடக்கும் 3ஆவது சிறப்பு முகாமில், 20 ஆயிரம் மையங்களில் 15 லட்சம் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவாக்சின் கோவிஷீல்டு போடப்பட உள்ளதால் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |