தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் இன்று காலை 9 மணி முதல் மாலை மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக விழுப்புரத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, சிட்டாம்பூண்டி, அனந்தபுரம், தாண்டவசமுத்திரம், அப்பம்பட்டு, பள்ளியம்பட்டு, மீனம்பூர், தாண்டவசமுத்திரம், துத்திப்பட்டு, பொன்னங்குப்பம், தச்சம்பட்டு, காரை, மொடையூர், திருவம்பட்டு, அணிலாடி, கீழ்மாம்பட்டு, கீழ்பாப்பாம்பாடி, சொரத்துார், ஜம்போதி நாட்டார்மங்கலம், சேர்விளாகம், களையூர், மேல்களவாய், அவியூர், மேல் ஒலக்கூர், தொண்டூர், சேதுவராயர்நல்லுார், கள்ளப்புலியூர், சத்தியமங்கலம், சோ. குப்பம், வீரமநல்லுார், தென்பாலை, செம்மேடு, ஆலம்பூண்டி, தேவதானம்பேட்டை, கணக்கங்குப்பம், பெரியமூர், பின்னலுார், கல்லேரி, ஒதியத்துார், பாடிபள்ளம், நெல்லிமலை, கெங்கவரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.