Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“நாள்பட்ட சளித்தொல்லையை விரட்ட”…. இந்த 2 பொருள் போதும்… சளி எல்லாம் பறந்து போயிடும்..!!

கருப்பட்டியுடன், குப்பைமேனி கீரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை நீங்குவதுடன் பல நன்மைகள் கிடைக்கும் இது குறித்து பார்ப்போம்.

கருபட்டியில் உள்ள இரும்பு மற்றும் கால்சியம் சத்து நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் பி மற்றும் அமினோ அமிலங்கள் கருப்பட்டியில் உள்ளதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. பருவமடைந்த பெண்கள் கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.

நார்ச்சத்து அதிகமாக கிடைக்கும். தினசரி உணவில் நாம் எடுத்துக் கொள்வது நம் உடம்பிற்கு நல்லது. குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து சாப்பிட்டு வர வறட்டு இருமல், நாள்பட்ட சளி ஆகியவை நீங்கும். கருப்பட்டியில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கருப்பட்டியில் எண்ணற்ற வைட்டமின்கள், மினரல் சத்துகள் உள்ளது. இது உடலை குளிர்ச்சி அடைய செய்யும். கிருமி உடலில் கலக்கும் சக்கரை அளவு குறைகின்றது.

சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியில் காப்பி சாப்பிட்டு வந்தால் நல்லது. இதில் சுண்ணாம்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் கருப்பட்டியை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் இருக்கும். எனவே கருப்பட்டி கால்சியம் மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் கொண்டதாக உள்ளது. இதனால் தான் மக்கள் மத்தியில் இந்த கருப்பட்டி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |