Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

நாள்பட்ட சளித்தொல்லை நீங்கணுமா…” இந்த இரண்டு பொருளை மட்டும் சாப்பிடுங்க”…. சளி எல்லாம் ஓடிப் போயிடும்..!!

கருப்பட்டியுடன் குப்பைமேனியை கீரையை சேர்த்து சாப்பிட்டால் நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும். இது குறித்து விரிவாக இதில் பார்ப்போம்.

சளி, இருமல், காய்ச்சல் என்பது அனைவருக்கும் எளிதாக வரக்கூடிய ஒரு தொற்று. இது பெரியவர்களைவிட குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கும். ஏனென்றால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இந்த சமயத்தில் அவர்களுக்கு விரைவில் தொற்று பரவ வாய்ப்பு இருக்கும். இதனால் வீட்டில் சில மருத்துவக் குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

பனகற்கண்டு, கருப்பட்டி அனைத்தும் முன்னொரு  காலத்தில் சாதாரணமாக பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதனை பார்ப்பது மிகவும் அதிசயமாக இருக்கிறது. கருபட்டியில் உள்ள இரும்பு மற்றும் கால்சியம் சத்து நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது.  பருவமடைந்த பெண்கள் கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து சாப்பிட்டு வர வறட்டு இருமல், நாள்பட்ட சளி ஆகியவை நீங்கும். கருப்பட்டியில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கருப்பட்டியில் எண்ணற்ற வைட்டமின்கள், மினரல் சத்துகள் உள்ளது. இது உடலை குளிர்ச்சி அடைய செய்யும். கிருமி உடலில் கலக்கும் சக்கரை அளவு குறைகின்றது.

சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியில் காப்பி சாப்பிட்டு வந்தால் நல்லது. இதில் சுண்ணாம்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் கருப்பட்டியை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் இருக்கும். எனவே கருப்பட்டி கால்சியம் மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் கொண்டதாக உள்ளது. இதனால் தான் மக்கள் மத்தியில் இந்த கருப்பட்டி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |