Categories
தேசிய செய்திகள்

“நாள் முழுக்க உயிர் பயத்துடனே இருக்கிறேன்..!” இளைஞர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!!

கொரோனா பாதித்த இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் பயத்துடன் காற்றாடியை மாற்றுமாறு வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. 

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்து வருகிறது. தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இவற்றில் வடமாநிலங்களில் நிலை மேலும் கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவமனைகள், தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் சுடுகாடு வரையில் அனைத்திற்கும் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் பீதியில் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

எப்படியோ மருத்துவமனையில் இடம் கிடைத்தாலும், உயிருக்கு பாதுகாப்பு இருக்கிறதா? என்று கூறமுடியாது. மேலும் மருத்துவமனையில் கவனக்குறைவினால் ஆக்சிசன் சிலிண்டர்கள் வெடிக்கின்றன. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. மேலும் ஆம்புலன்ஸ் ஓட்டையுடன் இருப்பதால் அதிலிருந்து உடல்கள் சாலையில் விழுகின்றன.

 

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும், கொரோனா பாதித்த ஒரு இளைஞர் அஞ்சி நடுங்கி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் நாளெல்லாம் பயத்துடனேயே இருக்கிறேன். இந்த காற்றாடியை மாற்றுங்கள், இல்லையெனில் என்னை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யுங்கள் என நிறைய தடவை மருத்துவமனை பணியாளர்களிடம் கூறிவிட்டேன்.

அவர்கள் யாரும் இதனை கண்டுகொள்ளவில்லை என்று கூறியுள்ளார். கொரோனா நோயாளியான இந்த இளைஞர் மிகவும் பயத்துடன் வெளியிட்ட இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் நிறைய படுக்கைகளில் நோயாளிகள் உள்ளனர். அதில் ஒரு படுகையிலிருந்து இளைஞர் படுத்துக்கொண்டு இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதாவது அவருக்கு மேல் இருக்கும் காற்றாடி அந்தரத்தில் ஆடுவது போன்று இருக்கிறது. மிகப்பெரிய ஓட்டை ஒன்றிலிருந்து அந்த காற்றாடி அதிக இறைச்சலுடன் சுழன்றுகொண்டிருக்கிறது. இது அந்த நபருக்கு மட்டுமல்ல, பார்க்கும் அனைவருக்குமே அதிகமான பயத்தை ஏற்படுத்துகிறது என்பது உண்மையே.!

Categories

Tech |