Categories
லைப் ஸ்டைல்

நாள் முழுவதும் உட்கார்ந்தே வேலையா…? உடல் சோர்வா இருக்கா…?அப்ப இத கட்டாயம் செய்ங்க…..!!

உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சியுடன் பணிபுரிவதற்கான சிறு பயிற்சிமுறை  குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். 

இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் என அனைவரும் கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்ந்தபடியே வேலை பார்ப்பதுடன், இரவு, பகல் என மாறி மாறி ஷிப்ட் முறைப்படி தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். அலுவலகத்தில் நீண்ட நேரம் அமர்ந்தபடியே, வேலை பார்ப்பவராக நீங்கள் இருந்தால், கண்டிப்பாக நாள்தோறும், சோர்வுடனே பணிபுரிபவர்களாக இருப்பீர்கள். ஆனால், இந்த சோர்வு நிலை நீங்கி புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியமான மனநிலையுடனும் பணிபுரிய சில டிப்ஸ்களை காண்போம்.

அன்றாடம் அலுவலகம் சென்ற பின், நாற்காலியில் அமர்ந்தபடியே, தலையை இடது தோள்பட்டை பக்கமாக சாய்த்து, பிறகு வலது புறமாக சாய்க்க வேண்டும். இதே போல் தலையை மேலே உயர்த்தி, கீழே குனிந்து செய்யுங்கள். ஒரே இடத்தில் அமர்ந்து இருக்காமல், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து நடந்தால், சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும். அதே போல் மேற்கண்டபடி, தலையை அடிக்கடி அதே போல் செய்து பயிற்சி கொடுப்பதன் மூலம், கனமாக இருப்பது போன்ற உணர்வை அது தராது. இது சோர்வை போக்கவும் உதவும். 

Categories

Tech |