அதிமுக முன்னாள் அமைச்சர் டிஜே குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தன்னுடைய துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் மக்களின் உயிரை காக்கும் நலவாழ்வு துறையை கடந்த 14 மாத காலமாக தனது தற்கொலை நிர்வாகத்தால் கோமா நிலைக்கு கொண்டு சென்ற மா.சு என்ற ஆளும் கட்சியினரால் அன்போடு அழைக்கப்படும் மா. சுப்ரமணியன் அவர்கள் எங்களுடைய கழக இடை பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான அண்ணன் திரு எடப்பாடி பழனிசாமி மீது அறிக்கை என்னும் பெயரில் ஊளையிட்டு இருக்கிறார்.
மக்கள் நலப் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலினை விட மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணா எடப்பாடி அவர்கள் நான்கரை வருடங்கள் நல்லாட்சி நடத்தியவர் என்றதனால் அரசிற்கு வழிகாட்டுகின்றார். இதுவே எதிர்க்கட்சியின் ஜனநாயக கடமை. மாணவ செல்வங்களும் இளைஞர்களும் சீரழிவதை அண்ணன் எடப்பாடி பழனிசாமி சுட்டிக் காட்டியதை தாங்க முடியாமல் மாசுபிரமணியன் புலம்பியுள்ளார். தற்போதைய ஆளும் கட்சியினால் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருப்பதால் தமிழகத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்களின் வியாபாரம் கொடி கட்டி பறப்பது மக்கள் மத்தியில் எடுத்து வைத்த ஆத்திரத்தில் ஒரு குடும்பத்திற்கு சேவகம் செய்யும் இந்த விடியா அரசின் அமைச்சர் மா. சுப்ரமணியன் ஊளையிட்டு பார்க்கின்றார்.
உழைப்பு என்றால் அதற்கு என்ன விலை என்று கேட்பவர்கள் தான் திமுகவினர். அதனால் மா சுப்பிரமணியனை போல் தலைமைக்கும் தலைமையின் வாரிசுகளுக்கும் முறை வாசல் வேலை செய்து பதவிகளுக்கு வந்தவர் அல்ல. மா.சுபிரமணியனின் தற்போதைய தலைவர் திமுக ஸ்டாலினை போல தந்தையின் மடியில் தவழ்ந்து வாரிசு அடிப்படையில் பதவிகளை பிடித்தவரும் அல்ல. அண்ணன் திரு எடப்பாடி அவர்கள் மேலும் தன் மனைவி பெயரில் செய்த நில மோசடி என்னும் வழக்கு கத்தி இவர் தலைக்கு மேல் தொங்குவதை மா சுப்ரமணியன் மறந்துவிட்டார் போலவும் தங்களது கட்சியின் செயலாளரும் மொத்த தலைவருமான துரைமுருகன் அவர்கள் திமுக தற்போது விபச்சாரிகளின் கூடாரமாக மாறிவிட்டது. கட்சி மாறி வருபவர்கள் விபச்சாரிகள் என்று சொன்னதை கேட்ட பின்பும் நாக்கை பிடுங்கிக் கொள்ளாமல் மா சுப்பிரமணியன் வாய் நீளம் காட்டுவது வெட்கக்கேடான விஷயம். யாகாவராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு மக்களை காக்கும் அறப்போரில் அறம் காத்த முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான திரு எடப்பாடி யார் அவர்கள் ஈடுபட்டு வருகின்றார்.
இந்த கேள்வியினால் வெற்றி பெறும் வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களும் அனுபவித்து நிற்பார்கள் என்பதை இந்த கும்பகர்ண ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கையாக கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.நிர்வாக திறனற்ற திமுக அரசும் அதன் அமைச்சர்களும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக நீண்ட அறிக்கையை கொடுப்பதற்கு பதிலாக மக்கள் பிரச்சனையை தீர்ப்பதில் கவனம் செலுத்தினால் தமிழகம் மகிழ்ச்சி அடையும். மேலும் தமது திறமையின்மையை மறைப்பதற்கு எதிர் கட்சிகளை குறை சொல்லும் மறைந்த திரு கருணாநிதி மாடல் அரசு திருத்த ஒரு வாய்ப்பளித்த மக்களை மீண்டும் வேதனையில் தள்ள வேண்டாம் என்று இருக்கும் காலத்தை மக்களுக்கான ஆட்சியாக நடத்துவதை இவர்களுக்கு செய்யும் உதவியாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டிருக்கிறார்.