Categories
உலகசெய்திகள்

“நாஸ்டர்டாமஸின் மற்றொரு கணிப்பு குறித்த செய்தி”… அதிர்ச்சி அடைந்துள்ள பிரிட்டன் மக்கள்..!!!!!

நாஸ்டர்டாமஸ் கணிப்பு குறித்த செய்தி ஒன்று வெளியாகி பிரித்தானிய மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பிரித்தானிய மகாராணியார் தனது 96 வது வயதில் இயற்கை எய்துவர் என பிரஞ்சு ஜோதிட நிபுணரான நாஸ்டர்டாமஸ் 450 ஆண்டுகளுக்கு முன்பே கணித்திருப்பதாகவும் அந்த கணிப்பு மிகச் சரியாக நிறைவேறி விட்டதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது நாஸ்ட்ரடாமஸின் மற்றொரு கணிப்பு குறித்த செய்தி ஒன்று வெளியாகி பிரித்தானியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதாவது அது என்ன என்றால் மன்னர் சார்லஸ் தன் பதவியை துறக்க கட்டாயப்படுத்தப்படுவார் எனவும் அதனை தொடர்ந்து இளவரசர் ஹரி மன்னராக பொறுப்பேற்பார் எனவும் கணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதில் கணிக்கத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால் நாஸ்டர்டாமஸ் எந்த விஷயத்தையும் நேரடியாக பெயர் குறிப்பிட்டு உரைநடையாக எழுதி வைக்கவில்லை. மேலும் அவர் கவிதைகளாக எழுதி வைத்த விஷயங்களை மற்றவர்களால் விளக்கப்படுகின்றது. அந்த வகையில் மரியோ ரீடிங் என்ற பிரித்தானிய எழுத்தாளர் நாஸ்டர்டாமஸின் கவிதைகளில் கூறப்பட்டிருக்கின்ற விஷயங்களை விளக்கியுள்ளார். அவற்றில் ஒன்றுதான் மகாராணியாரின் மரணம் இந்த நிலையில் மகாராணியர் கடந்த 2022-ம் வருடம் தனது 96 வது வயதில் இயற்கை இதுவரை என நாஸ்டர்டாமஸ் கணத்திருப்பதாக கூறியுள்ளார் ரீடிங். அத்துடன் 2022 ஆம் வருடம் சார்லஸ் மன்னராகும்போது அவருக்கு 74 வயது இருக்கும்.

ஆனால் இளவரசி டயானாவை சார்லஸ் விவாகரத்து செய்தால் பொதுமக்களில் ஒரு சாரார் சார்லஸ் மீது வைத்திருக்கும் வெறுப்பு இன்னமும் நீடிக்கிறது. இதற்கிடையே மன்னர் ஆவார் என சற்றும் எதிர்பாராத ஒரு நபர் திடீரென மன்னர் அவர் என நாஸ்டர்டாமஸ் எழுதி வைத்திருக்கின்றாராம். அப்படியானால் மன்னரானவர் என மக்கள் நம்பிக் கொண்டிருக்கும் வில்லியம் மன்னராகாமல் மன்னராக வாய்ப்பில்லை என கருதப்படும் இளவரசி ஹரி மன்னராவர் என்று பொருளா என கேள்வி எழுப்புகிறார் ரீடிங். மேலும் அப்படி ஹரி மன்னரானால் அவரது 38வது வயதில் மன்னர் ஆவார் என கூறுகின்றார் ரீடிங். இந்த அதிரடி விளக்கங்கள் போக மற்றொரு விஷயம் பற்றியும் எழுதி இருக்கிறார் ரீடிங். அது என்னவென்றால் சார்லஸ் மன்னராக இருக்கும்போதே காமன்வெல்த் நாடுகளில் பல அமைப்புகளில் இருந்து பிரிந்து சென்றுவிடும் என கணித்திருக்கிறாராம் நாஸ்டர்டாமஸ்.

Categories

Tech |